Monday, July 23, 2007

ஈழத்து நாயிங்களா ஏண்டா சரவணா ஸ்டோர்ஸ் போறீங்க


This is happening for the n th time.Why should people go there?we should boycott the shop and only then they will realise.Our people are stupid and hooliganism has become part of life with all kazhagams in the forefront.
Comments L.sivalingam thatstamil.com

செய்தி இலண்டனிலிருந்து சென்று பந்து களவாடினார் ஈழத்தமிழர்


லண்டன் தமிழருக்கு அடி-சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் அடாவடி: 7 பேர் கைது

ஜூலை 23, 2007 தற்ஸ்தமிழ்கொம்







சென்னை: லண்டனைச் சேர்ந்த தமிழரின் கைக் குழந்தை பந்தைத் திருடி விட்டதாக கூறி, அவரது கையில் இருந்த பந்தைப் பறித்ததோடு நில்லாமல், அந்த தொழிலதிபரையும் சரமாரியாக அடித்து உதைத்த சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் மற்றும் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தி.நகரில் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அடாவடி, அராஜகங்கள் செய்தது தொடர்பாக பலமுறை புகார்கள் வந்துள்ளன.



ஒருமுறை பெரிய தொழிலதிபரின் மனைவியையே அடைத்து வைத்ததாகவும் புகார் எழுந்தது. அவர் மானபங்க முயற்சி நடந்ததாகக் கூட புகார் கூறினார். இந்த ஊழியர்களின் அராஜக செயல்கள் குறித்து பலமுறை போலீஸில் புகார்கள் கொடுக்கப்பட்டு, சிலமுறை நடவடிக்கைகள் எடுத்தும் கூட இன்னும் அவர்கள் திருந்தியபாடில்லை.

இந் நிலையில், லண்டனைச் சேர்ந்த தமிழரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள். லண்டனில் வசிக்கும் இளஞ்செழியன் தனது மனைவி குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார்.



வழக்கமாக சென்னைக்கு வரும் வெளியூர்க்காரர்கள் சரவணா ஸ்டோர்ஸுக்குப் போவது போல இவரும் குடும்பத்துடன் போய் பொருட்களை வாங்கியுள்ளார்.

அப்போது அவரது கைக் குழந்தையிடம் பந்தைப் பார்த்த கடை ஊழியர்கள், அதை அவர் திருடி விட்டதாக கூறி பறித்துள்ளனர். ஆனால் அந்தப் பந்துக்குப் பணம் கொடுத்து விட்டதாக கூறிய இளஞ்செழியன், அதற்கான பில்லையும் காட்டியுள்ளார்.

ஆனால் அதைக் கண்டுகொள்ளாத கடை ஊழியர்கள் இளஞ்செழியனை சரமாரியாக அடித்துள்ளனர். காசு கொடுத்து பொருளை வாங்கி, தேவையில்லாமல் அடியையும், அவமரியாதையையும் வாங்கிய அதிர்ச்சியில் இளஞ்செழியன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் 6 ஊழியர்களைக் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகி விட்டனர்.



இந்த நிலையில் நேற்று கடை கண்காணிப்பாளர் லிங்கராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

26 comments:

said...

சரவணா ஸ்டோர்ஸ் மீது ஏற்கனவே பல புகார்கள் வந்து விட்டன. அங்கு போவதைத் தவிர்ப்பது நல்லது என்றுதான் தோன்றுகிறது.

ஈழத்தவர்கள் மட்டுமல்ல தமிழகத்துத் தமிழர்களும் முந்திய செய்திகளில் மாட்டியுள்ளார்கள். இனிமேலாவது சரவணா ஸ்டோர்ஸ் மாறுகிறதா என்று பார்க்கலாம்.

said...

முதல்முறையா ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ்க்குப் போனப்ப எனக்குக்
கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு, அங்கே நம்ம கைப்பையைக்கூட ஒரு
ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கட்டிக் கொடுத்தது. அவசரமா ஒரு கைகுட்டை
எடுக்கவும் முடியாது(-:
ச்சீன்னு போச்சு. அதுக்கப்புறம் அங்கே போறதே இல்லை. என்னதான் விலை மலிவுன்னாலும்,
மரியாதை இல்லாத இடம் அது.

Anonymous said...

ஈழத்து நாய்களுக்கு இது தேவை!
லண்டனிலும், ரொரெண்ரோ, நியூயோர்க், போன்ற நகர்களில் பனியிலும் கடும்குளிரிலும் உழைத்த காசை எல்லாம் குமரன் சில்க்கில் கொட்டி அதை இங்கு வந்து பீத்திக்கொள்வதும் ரஜினி படத்துக்கு 21 டொலரில் ரிக்கற்வாங்குவதும் இந்த நாய்களுக்கு கைவந்த கலை. இப்படித்தான் சிங்களவருக்கு நக்கினார்கள் இப்போது இந்தியாவுக்கு ...பரதேசி நாய்கள்! இவங்களுக்கு வேணும்!!!!

said...

//ஈழத்து நாயிங்களா // வார்த்தையில் கடுமை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவே எண்ணுகிறேன்.

சரவணாஸ்டோர் மட்டும் அல்ல பல கடைகள் அப்படியே. தன்மானம் உள்ள எவனும் இப்படிக் கடைகளில் நுழையவே மாட்டான். என்னதான் விலை குறைவாக இருந்தாலும் இவர்களை உதாசீனப்படுத்த வேண்டும்.

said...

தரமில்லாத பொருளை வாங்கனுமின்னா அங்கே போங்க. இது பலதரப்பட்ட மக்களின் கருத்து.. Use and throw மேல நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு சரவணா ஸ்டோர்ஸ் உகந்த இடம்

said...

சரவணா ஸ்டோர்ஸ் மீது ஏற்கனவே பல புகார்கள் வந்து விட்டன. அங்கு போவதைத் தவிர்ப்பது நல்லது என்றுதான் தோன்றுகிறது.

என்னதான் விலை மலிவுன்னாலும்,
மரியாதை இல்லாத இடம் அது.

உண்மைதாங்க . . . .

சரவணா ஸ்டோர்ஸ் மேல எத்தனை புகார் கொடுத்தாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

காரணம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்.

அவர் யார் என்று தெரியுமா. . . . .?

said...

"ஈழத்து நாயிங்களா " ???

தலைப்பு ஏன் இப்படி? படிக்க கஷ்டமாக இருக்கிறது.

said...

ஐயா,
ஆட்சேபனை இல்லையெனின் ஒரு சின்னக் கருத்து. குறைநினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

உணர்ச்சிவசப்பட்டு பொறுமையிழந்து பொறுப்பற்ற விதமாக எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது என நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட கடைக்கும் ஒரு சில தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் நடந்த பிரச்சனையை, அக் கடை முழு ஈழத் தமிழர்களுக்கும் எதிரானது எனும் வகையில் பொதுப்படுத்தும் வகையில் உங்களின் பதிவுத் தலைப்பு அமைந்துள்ளது. இது தவறானது மட்டுமல்ல தார்மீகத்திற்கும் புறம்பானது என்பதை பணிவன்புடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Anonymous said...

//சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர் மர்ம சாவு: கொல்லப்பட்டாரா?//

http://thatstamil.oneindia.in/news/2005/04/30/saravana.html

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

//ஈழத்து நாயிங்களா " ???

தலைப்பு ஏன் இப்படி? படிக்க கஷ்டமாக இருக்கிறது//

கோபத்தில் தாய் மகனைப்பேசுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.

ஒரு 3 ,4 வருடங்களிற்கு முன்னரும் இப்படித்தான் ஒரு சம்பவம் ஒரு நடுத்தரகுடும்ப பெண்ணை குற்றம் சாட்டி அடித்திருந்தார்கள்.

அப்போது வலைப்பதிவு இருந்திருக்கவில்லை.இப்போது இருக்கிறது கோபிக்கிறேன்.

Anonymous said...

பதிவு நன்றாக இருந்தாலும் தலைப்பு எனக்கு வருத்தமளிக்கிறது.

ஒட்டு மொத்த ஈழத்தவரும் சரவணா ஸ்டோர்ஸ்தான் போவேன் என்று அடம் பிடித்து போகிறார் போல ஒரு பிம்பம் தோன்றுகிறது, தலைப்பைப் படித்த உடனே.

அதே சமயம் சரவணா ஸ்டோர்ஸ் மரியாதைக் குறைவான இடம் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்புறம் //ஈழத்து நாய்களுக்கு இது தேவை!
லண்டனிலும், ரொரெண்ரோ, நியூயோர்க், போன்ற நகர்களில் பனியிலும் கடும்குளிரிலும் உழைத்த காசை எல்லாம் குமரன் சில்க்கில் கொட்டி அதை இங்கு வந்து பீத்திக்கொள்வதும் ரஜினி படத்துக்கு 21 டொலரில் ரிக்கற்வாங்குவதும் இந்த நாய்களுக்கு கைவந்த கலை. இப்படித்தான் சிங்களவருக்கு நக்கினார்கள் இப்போது இந்தியாவுக்கு ...பரதேசி நாய்கள்! இவங்களுக்கு வேணும்!!!!//

இந்த அனானி கமெண்ட் தேவையா??? இதை பப்ளிஷ் செய்வதன் நோக்கம் என்ன. மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்தான். ஆனால் இது ஒரு முகம் காட்டத் திராணியற்றவனின் வக்கிரபுத்தியின் வெளிப்பாடு. இதை எல்லாம் பப்ளிஷ் செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள். அப்புறம் உங்கள் இஷ்டம்.

Anonymous said...

சரவண ஸ்டோர்ஸில் ஒரு தடவை 3 வயதுக் குழந்தையை அடித்து விரட்டியதைப் பார்த்திருக்கின்றேன். கொடுமை என்னவென்றால் அந்தக் குழந்தை ஓடி விளையாடியது தான். மூச்சு அடங்குவது போன்று அந்தக் குழந்தை கதறியது. கன்னத்தில் சூடு வைத்தது போல சிவந்து கண்டியிருந்தது.

Anonymous said...

I dont think that the Saravana store. would change its atttitude.Every one Knows that Saravana Stores atttitudes always against tamilians and all backward class peoples.Because they obeyed and follow Manu Script(manu smirithi).
So Avoid purchasing goods in Saravana stores and also avoid the Manu Script(Paarpanarhalin poermulakam namaku ethiraaha).Ithu thaan manu tharmam..........
I think Saravana Store Nayingala is the best title.(b cause they only done the terror against us).

Anonymous said...

அதே மாதிரி மானமுள்ள மனிதன் எவனும் இனிமேல் தினமலர் வாங்கி படிக்ககூடாது .

பத்திரிக்கை இருக்கும் திமிரில்தானே அந்த பார்பன பரதேசி பெண்ணிடம் சில்மிசம் செய்து இருப்பான் .

இம்மாதிரி பெரிய நிறுவனங்களை போக்கிரித்தனத்தை நாம் அதை பகிஸ்கரிப்பதாலேயே அடக்க முடியும்

said...

தலைப்பை மாற்றுங்கள். தேவையில்லாமல் ஈழத்தவர் மனதை நோகடிப்பதைத் தவிர இத்தலைப்பால் பலன் ஏதும் இல்லை. ஈழத்தவரைத் தாய் மகனைக் கடிவது போல் இத்தலைப்பு வைத்தீர்கள் என்றால் அவர்களைச் சாடி அநாகரிகமாக வரும் பின்னூட்டங்களை அனுமதிப்பது ஏன்?

said...

//அவர்களைச் சாடி அநாகரிகமாக வரும் பின்னூட்டங்களை அனுமதிப்பது ஏன்?//

அது மேலோட்டமாக பார்த்தால் அநாகரிகம் போல தெரிந்தாலும் அதில் எனக்கு ஈழத்தவர்மீதான வெறுப்பான பின்னூட்டமாக தெரியவில்லை
கடிந்துகொள்ளவது போலதான் எனக்கு தோன்றியது.

said...

இங்க தமிழ்நாட்டு தமிழர்களை எல்லாம் இந்துவாக்கி தலையில் மிலகாய் அரைக்க துடிக்கும் வெறிநாய் அந்த கடை மொதலாலி

தமிழனை தமிழன் என்று அடையாளப்படுத்தும் ஈழப்போராட்டமும் ஈழத்தமிழர்கலும் அந்த எச்சக்கலைக்கு வெருப்பை ஏற்ப்படுத்துவது இயல்பானதுதான்

இவன் கட்டி காக்க துடிக்கும் இந்து கலாச்சாரம் இவன் கடை விளம்பரத்துல கிழிஞ்சி தொங்கும் நடிகைகலின் உடைகலில் பல்லிலிப்பதை கூட புரிந்துகொள்ளாத மடையர்களாக தமிழர்கள் இருந்தால் இதுவும் செய்வானுக இன்னும் செய்வானுக

ஸ்டாலின் குரு

said...

ஒரு தவறு நடந்திருக்கிறது.நிச்சயம் கண்டிக்கவேண்டும்.

அதிலென்னயா ஈழத்தவர்.. இந்தியர்.. பாக்கிஸ்தானியர்? ஈழத்தவர் தவிர மற்றவர் அடி வாங்கினால் பரவாயில்லையா?

பிரச்சனையை நோக்கிய விதம் சரியில்லை.

Anonymous said...

//..இது ஒரு முகம் காட்டத் திராணியற்றவனின் வக்கிரபுத்தியின் வெளிப்பாடு..//

ஆஹா அப்படியா? முகம் காட்டுபவன் என்றால் நல்லவன் முகம்காட்டாதவன் வக்கிரபுத்தி உள்ளவன் என்ற உங்களின் விளக்கம் அருமை!
நான் சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என சொல்லுங்கள் முதலில். ஈழத்தமிழர்களில் நான் சொன்ன வேலை (குமரன் சில்க், சரவணா ஸ்ரோர், சரவண பவன், சொகுசு பஸ், சத்தியசாயி பாபா, ரஜினி பாபா, சிவாஜி ) செய்தவர்கள் சொல்லட்டும். எல்லா 'நாய்களும்' இந்தியா போய் வந்து காட்டும் 'விலாசம்' சொல்லி மாளாது. ஆனால் தமது நண்பர்களிடம் தமக்கு நேர்ந்த அவமானங்களை ரகசியமாக சொல்லி அழுவார்கள். ஆட்டோ ட்ரைவர், டாக்சி ட்ரைவர், பஸ்கண்டக்டர், சொகுசு பஸ் ஒழுங்குபடுத்துபவர், கல்யாண மண்டபத்தரகர், அகதிகளுக்கான எக்ஸ்சிற் விசா கொடுப்பவர் என நீளும்பட்டியல். திருப்பிக்கேட்டால் அவங்களும் 'எங்கட தமிழ் ஆக்கள்' என ஏதோ 'காந்தி' மூஞ்சி காட்டுவார்கள்.
நானும் ஈழத்தமிழன் தான். இதெல்லாம் தொண்டை வறளக் கத்திக் கத்தி அலுத்துப்போனவன்!!!!

இதைச்சொல்வதால் 'வக்கிரபுத்தி' பட்டம் கொடுத்த இணையத்தில் 'முகம்' உள்ள பதிவாளருக்குக் கோடி வணக்கம் !!!!!

said...

தலைப்பு...பரபரப்புக்கு வைத்த தலைப்பு...
மலிவா சாமான் வாங்கவேண்டுமென ஒருவர் எண்ணுவதில் எந்தத் தப்புமில்லை. அது அவர் வசதி, விருப்பம் பொறுத்தது.
பதிவின்படி.... பந்துக்குப் பணம் கட்டிப் பற்றுச்சீட்டும் பெற்றுள்ளார்.
அதன் பின்பும் ஈனத்தனம் நடந்துள்ளது.
இது உண்மையானால் இந்த நிறுவனம்
கண்டிக்கப்படவேண்டியது.
இப்படி...வேறு ஒரு நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லை. இது உலகிலேயே... சீர்மிகு சென்னையில் தான் நடக்கும்..
தட்டிக் கேட்கத் துப்பில்லாதவர்கள்...அங்குதான் உள்ளார்கள் போலும்.
சில பின்னூட்டம் என்ன வகைப் புலம்பல் என்பது புரியவில்லை.
ரெஸ்ரரன்றில் கோப்பை கழுவி உழைப்பது இழுக்கு, ''தூள்'' விற்பது சிறப்பென்கிறாரா? அல்லது
கள்ள மட்டை போடச் சொல்கிறாரா??

Anonymous said...

/..இது உண்மையானால் இந்த நிறுவனம்
கண்டிக்கப்படவேண்டியது.../

கண்டித்தல் என்றால் என்ன? வெறும் 'எமது கண்டனத்தை தெரிவிக்கிறோம்' என அறிக்கை விடுவதா? அல்லது இதை செய்தவர்களுக்கு 'உறைக்கும்' படி செய்வதா? மேற்கு நாடுகளில் என்றால் வழக்குப் போடுட்டு வைத்தியச்செலவுக்கும் மன உளைச்சலுக்கும் சேர்த்து மில்லியன் கணக்கில் கொடுக்கவேணடி வந்திருக்கும்.
பிரான்ஸில் என்ன நடந்திருக்கும் யோகன்?
பரிஸ் நகரத்தை உங்கள் அடையாளமாகவே கொள்ளும் நீங்கள் வெறும் 'கண்டிக்கபட வேண்டியது' என்று நிறுத்தியது மனவருத்தத்தைக் கொடுக்கிறது.
கோப்பை கழுவுவது இழுக்கு என ஒருவரும் சொல்லவில்லையே! மாறாக அவ்வாறு கடுமை உழைப்பை ஈழத்தமிழர் பணம் தவிர அவர்கள் பற்றிய கரிசனை கொஞ்சமும் அற்ற இந்திய முதலாளிகளிடம் கொட்ட வேண்டாம் எனத்தான் சொன்னே!!!

said...

தலைப்பு சற்று கடுமைதான் .உணர்ச்சியை வெளிப்படுத்தஅதை நான் உபயோகித்தமைக்காக ஈழ நண்பர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்.


பின்னூட்டமிட்டு புதிய தகவல்களை தந்தவர்களுக்கும் இந்த அட்டுழியத்தை எதிர்த்து தமது கருத்தை வெளிப்படுத்தியவர்களுக்கும் நன்றி.

Anonymous said...

//ஆஹா அப்படியா? முகம் காட்டுபவன் என்றால் நல்லவன் முகம்காட்டாதவன் வக்கிரபுத்தி உள்ளவன் என்ற உங்களின் விளக்கம் அருமை!
நான் சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என சொல்லுங்கள் முதலில். ஈழத்தமிழர்களில் நான் சொன்ன வேலை (குமரன் சில்க், சரவணா ஸ்ரோர், சரவண பவன், சொகுசு பஸ், சத்தியசாயி பாபா, ரஜினி பாபா, சிவாஜி ) செய்தவர்கள் சொல்லட்டும். எல்லா 'நாய்களும்' இந்தியா போய் வந்து காட்டும் 'விலாசம்' சொல்லி மாளாது. ஆனால் தமது நண்பர்களிடம் தமக்கு நேர்ந்த அவமானங்களை ரகசியமாக சொல்லி அழுவார்கள். ஆட்டோ ட்ரைவர், டாக்சி ட்ரைவர், பஸ்கண்டக்டர், சொகுசு பஸ் ஒழுங்குபடுத்துபவர், கல்யாண மண்டபத்தரகர், அகதிகளுக்கான எக்ஸ்சிற் விசா கொடுப்பவர் என நீளும்பட்டியல். திருப்பிக்கேட்டால் அவங்களும் 'எங்கட தமிழ் ஆக்கள்' என ஏதோ 'காந்தி' மூஞ்சி காட்டுவார்கள்.
நானும் ஈழத்தமிழன் தான். இதெல்லாம் தொண்டை வறளக் கத்திக் கத்தி அலுத்துப்போனவன்!!!!

இதைச்சொல்வதால் 'வக்கிரபுத்தி' பட்டம் கொடுத்த இணையத்தில் 'முகம்' உள்ள பதிவாளருக்குக் கோடி வணக்கம் //

இவ்வளவு தூரம் தெளிவாய் பிழையில்லாமல், சொல்ல நினைத்ததை (திட்ட நினைத்ததை) சரியாக செய்ததிலிருந்தே தெரிகிறது. வெகு நிச்சயம் நீங்கள் ஓரளவு பிரபல வலைப்பதிவராய்த்தான் இருக்க வேண்டும்.

நீங்களே வெளியில் ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாயும், அவர்களின் மீது மிகுந்த அனுதாபம் உடையவராயுமிருப்பது போன்று வேஷம் போடுபவராயிருக்கலாம். ஆனால் அவ்வப்போது இது போன்ற ஒரு சில பதிவுகளில் அவர்களை இப்படி திட்டி உங்களது இன்னொரு முகத்திற்கு தீனி போடுவது போன்று நடந்து கொள்வதாய்த்தான் எனக்குப் படுகிறது.

இல்லை உண்மையிலேயே உங்களிற்கு அவர்கள் மீது அக்கறை என்றால், நாய்கள், பரதேசிகள் என்று திட்டுவதை நிறுத்தி விட்டு, உங்களது பதிவுகளில் அவ்ர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்.

இல்லை யாராவது தவறு செய்தால் அதை திருத்துவது எனது வேலை இல்லை என்று நீங்கள் சொல்பவராயிருந்தால், இப்படி திட்டவும் தேவையில்லை.

நீங்கள் முகம் காட்டாததால் உங்களை வக்கிர புத்தியுடையவன் என்று சொல்ல வில்லை அனானி. நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள்தான் உங்களிற்கு இந்த பேரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இதே பதிவில் வேறு சில அனானிகளும் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களைச் சொல்லாமல் உங்களை மட்டும் ஏன் சொல்கிறேன் என்பதை யோசிக்கவும்.

(இது அடுத்தவர் பதிவு என்பதால், இதற்கு மேல் இதைப் பற்றி பேசி பதிவை திசை திருப்ப விரும்ப வில்லை. இது தொடர்பான எனது கடைசி பின்ன்னூட்டம் இதுவே)

Anonymous said...

நந்தா,

நீங்களே கடைசிப்பின்னூட்டம் என சொல்லி விட்டீர்கள். இதன் பின் செய்ய அவ்வளவாக ஒன்றுமில்லை.

எனினும் நான் ஒரு ஈழத்தமிழன் என்பதிலும் ஈழமே முடிந்த முடிபு என்ற தீர்மானத்தை 1977இல் இருந்தே எடுத்து அதில் இன்றுவரை மாற்றம் இல்லை என சொல்பவனும் எனபதில் உங்களுக்கு எந்த ஐயமும் வேண்டாம்.

திட்ட நினைத்ததை தெளிவாக சொல்பவன் 'ஓரளவு பிரபல வலைப்பதிவாளன்' என சொன்னது 100% பிழை. நான் ஈழத்தமிழ் சார்விடயங்களில் மட்டும் பின்னூட்டம் இடுபவன். அது மட்டுமல்ல இவ்வாறான ஈழத்தமிழ் சார் நிலைப்பாட்டினால் அனேக ஈழத்தமிழர் எதிர் களங்களில் தடை செய்யப்பட்டவன்!
'தெரிந்தோ தெரியாமலோ' என்று சொல்கிறீர்கள். தெரியாமல் செய்பவர்களை சொல்லித்திருத்தலாம். தெரிந்தே செய்பவர்களை என்ன செய்யலாம். உங்களுக்கு தெரிந்து செய்பவர்களை தெரியாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு அனேகரை (மிக மிக) தெரியும். இவர்களில் பெரும்பான்மையினர் பொருளாதார நன்நிலையில் இருப்பவர்கள். இவர்களை திட்டத்தான் வேண்டும், வேறு வழியே இல்லை நந்தா!
இது எனது பல்லாண்டு கால அனுபவப் பாடம்! சந்தைப்படுத்தல் திணைக்கள பொருட்கள், மாசிக்கருவாடு , குப்பை தமிழ் சினிமா ... இப்படி எவ்வளவு கத்தி இருப்பேன், அதுவும் அவர்களின் பொது வைபவங்களில் கூட! இதற்கு அவர்கள் எனக்கு 'வக்கிர புத்தி' பட்டம் கொடுத்தால் கூட தயங்குவதில்லை!
கேட்பார்களா? இல்லை!

Anonymous said...

/..வெளிப்படுத்தஅதை நான் உபயோகித்தமைக்காக ஈழ நண்பர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்..//

நீங்கள் வருத்தம் தெரிவித்தது உங்களின் நல்ல குணத்தைக் காட்டுகிறது.
எனினும் ஒரு ஈழத்தவன் என்ற முறையிலும் இவ்வாறான விடயங்களை விவாதித்து (தொண்டை வறள கத்தி என சொல்லலாம்) ஏறக்குறைய நண்பர்கள் , சமூகத்தினர் வட்டத்திலும் இப்போது இணையத்தளத்திலும் மிக்க நல்ல பெயர்களான 'வக்கிரபுத்தி பிடித்தவன்', 'அநாகரிகப்பேர்வழி' போன்ற பெயர்களை பெற்றவனுமான எனக்கு நீங்கள் செய்தது மிகச்சரி என்வே படுகிறது.