Thursday, July 12, 2007

ரசிகர் மன்ற முட்டாள்களே!

//நாஞ் சொல்லலை.
ஐயா சிவாஜியை சுவிங்கம் போடச் செய்த ராமதாஸ் ஐயா சொல்லியிருக்கிறார்.//

thatstamil.com
திருவண்ணாமலை: நடிகர், நடிகையர்களின் ரசிகர் மன்றங்களை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். திருவண்ணாமலையில் நடந்த விழாவில் ராமதாஸ் பேசுகையில், இளைஞர்களை கெடுப்பது சினிமாதான். இதன் மூலம் தான் சின்ன வயசிலேயே வன்முறை, செக்ஸ், பழிவாங்குதல் அனைத்தும் ஊசியில் மருந்தை செலுத்துவது போல் அவர்களின் மூளையில் திணிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட செயல்களுக்கு அறியாத கிராமத்து இளைஞர்கள் பலரும், படித்த இளைஞர்கள் கூட ரசிகர் மன்றம் என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையை கெடுத்து வருகின்றனர். இதன் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை இழந்து தெருவில் நிற்போர் இன்று பலர். எந்தவொரு நடிகர், நடிகையாவது அவர்கள் பெயரில் ஆரம்பிக்கும் ரசிகர் மன்றத்திற்கு பண உதவி செய்கிறார்களா? மசாலா படம்னு சொல்றாங்க. ஆனால் அதைப் போய் பார்த்தால் ஒருத்தன் 100 பேரையும் 1,000 பேரையும் அடிக்கிறான். அட எங்கேய்யா 100 பேரை ஒருத்தன் அடிக்கிறான். 100 பேர் சேர்ந்து தான் ஒருத்தனை அடிப்பாங்க. ஆனால் அப்படி காட்டினால் படத்தில நடிக்கிறவனோட பிழப்பு அதோகதி தான். கற்பழிப்பு சீன்களையும் விளக்கமாக காட்டுவதும் இந்த சினிமாவில்தான். இதெல்லாம் போதாதுன்னு இப்போ டி.வி. சீரியல்கள் எல்லாம் இரட்டை அர்த்தம் உள்ள கதையைத்தான் காட்டுகிறார்கள். அதைக் காட்டி குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் கெடுக்கிறாங்க. சினிமாவில் ஹீரோவாக நடிப்பவன் தான் தான் ஒரு மிகப்பெரிய அறிவாளி என காட்டி கொள்கிறான். இந்த அறிவாளி ஏன் சமூகத்தில் வெளியே வந்து நல்ல செயல்களை செய்யக் கூடாது.? அப்படி செய்தால் தனக்கு ரசிகர் மன்றம் யார் வைப்பார்கள்? ஆகவே ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு பதில் நான் ஒரு முட்டாள் என நெற்றியில் எழுதி ஒட்டிக் கொள்ளலாம் என்றார். சில நாட்களுக்கு முன், குறும்படம் மற்றும் ஆவணப்படம் தயாரிப்போர் கூட்டத்திலும் சினிமாக்காரர்கள் ஒன்றும் அறிவு ஜீவிகள் கிடையாது என்று பேசினார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil

4 comments:

said...

சினிமா சமூகத்திற்கு தேவையே இல்லாதது. ஒருசில முக்கிய கதை கலாச்சர பண்பாட்டு சரக்குகளை கொண்ட படங்களை தவிர மற்ற அனைத்துமே சும்மா வெறும் காலி டப்பாக்களே. மற்றபடி சுலபத்தில் பணம் செய்யும் வழியே இது.

இன்றுகூட நான் என் நண்பர் ஒருவரிடன் இதப்பற்றி பேசினேன். நமது மனம் சினிமா படங்களால் எந்த அளவுக்கு பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன என்று. சிறிய வயதில் இந்த பாழாய்ப்போன சினிமா படங்களை பார்த்திராமல் இருந்திருந்தேன் என்றால், இன்று நான் வேறொரு மனிதனாகக்கூட இருந்திருப்பேன்.

ராமதாஸ் சொன்னது மிகமிக சரி.

Anonymous said...

//ராமதாஸ் சொன்னது மிகமிக சரி. //

மாசிலா அய்யா,

மரம் வெட்டி அய்யா சொன்னதென்னவோ ஏற்க வேண்டிய கருத்து தான்.ஆனால் சினிமாவை விட தமிழ் சமுதாயத்தை சீரழித்தது,கட் அவுட் போஸ்டர் ஆடம்பர திராவிட கட்சிகளும்,மரம் வெட்டி அய்யாவின் ஜாதி அரசியல் சங்கங்களும்.உண்மையில் சொல்லப்போனா, மரம் வெட்டியின் ஆதங்கமே, தான் ஒருவன் மட்டுமே சமுதாயத்தை சீரழிக்கவேண்டும்,மத்தவங்க அந்த காரியத்தை செய்யக்கூடாது என்ற சுயநலம் தான்.

said...

அனானிக்கு,

கொஞ்சமும் நடுநிலமையுடன் பார்க்காமல் வன்ம காழ்ப்புணர்ச்சியுடன் வைத்திருக்கும் உங்கள் பின்னூட்டக் கருத்து நீங்கள் யாரென்று அப்பட்டமாக காட்டிக் கொடுத்து விட்டது.

இங்கே எழுதிய பதிவு சினிமா மற்றும் ரசிகர்களை பற்றியது. இப்போது ராமதாஸ் ஐயாவின் சாதி பற்றியும், அவரை மரம் வெட்டி என கிண்டலும் செய்து இருக்கிறீர்கள்.

நான் வயதிற்கு வந்த பிள்ளைகளுக்கு தகப்பன் என்கிற முறையிலும், இளைய சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையாலும் எனது கருத்துக்களை கூறினேன். சமுதாயத்தின் மீது எனது பார்வையும் உங்களது பார்வையும் ஒன்றல்ல என்பது புரிந்துவிட்டது.

Anonymous said...

ரஜினி சொன்னது மாதிரி "கண்ணா!, பன்னிகள்தான் (ரசிகர்கள்) கூட்டமா வரும், (அ)சிங்கம், சிங்கிளாத்தான் வரும்!"