இவங்கட அழும்பு தாங்க முடியல சாமி
நாங்க பத்திரிகைக்காரங்க.ஈரேழு உலகத்திலேயும்காலப் பதித்தவங்க என்பாங்க
அந்தவிகடன் இந்த விகடன் தராசு கிராசு மட்டை மண்ணாங்கட்டி இன்வெஸ்டிகேசன் ஜர்ன்னலிசம்
என்பாங்க
என்ன இழவோ
செய்தி இன்னான்னா..
புலிகளின் பெரிசு ஒருத்தரை தூக்கிட்டாங்களாம் என்று சிங்களர் ஒரு வெடியை கொளுத்த அதை தினமலர் ஊதி வானவேடிக்கையாக்க வையகமெல்லாம் (மாத்துக்கட்சியினர்) திருநாள் கொண்டாடிட புதுசா தாய்லாந்து அரசே நேரடியாய் அறிக்கையில் நாங்க யாரையும் அப்படி தூக்கல என்று அறிக்கைவிட்டு நெஞ்சில் சிலருக்கு பாயாசத்தையும் சிலருக்கு வெந்நீரையும் வார்த்திருக்கு.
| புலிகளின் முக்கிய உறுப்பினர் பத்மநாதன் கைது செய்யப்படவில்லை: தாய்லாந்து அரசு அறிவிப்பு |
| [புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2007, 04:08 ஈழம்] [அ.அருணாசலம்] |
| தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், அதன் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முகவருமான குமரன் பத்மநாதனை கைது செய்யவில்லை என்று தாய்லாந்து அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தாய்லாந்தின் இன்ரபோல் தலைவர் கேணல் அபிசாட் சுரிபன்யா தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகரும், அதன் வெளிநாட்டு ஆயுத முகவராக 20 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டவருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்படவில்லை.
குடிவரவு, குடியகல்வு திணைக்கள அறிக்கைகளின் படி கடந்த இரு வருடங்களாக அவர் தாய்லாந்திற்குள் நுழைந்ததற்கான தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இலங்கையைச் சேர்ந்த எவரையும் நாம் கைது செய்யவில்லை.
இது தொடர்பில் பங்கொக்கில் உள்ள சிறிலங்கவின் தூதரகத்திலும் தகவல்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் பத்தமநாதனை சிறிலங்காவிற்கு நாடு கடத்துமாறு கோரி சிறிலங்கா அரசாங்கத் தரப்பு தாய்லாந்து காவல்துறையினரை நாடியுள்ளதாக வெளிவந்த தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே, குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் படைத்துறை இணையத்தளம் தாய்லாந்து தகவல்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டிருந்ததுடன், பத்மநாதனின் கைது தொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்தின் உறுதியான தகவல்களுக்காக தாம் காத்திருப்பதாக இந்தியாவின் "ஹிந்துஸ்த்தான் ரைம்ஸ்" நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
yahootamil thinamalar News
ராஜீவ் படுகொலையில் தொடர்புடைய விடுதலைப்புலி கைது
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 11 செப்டம்பர் 2007 ( 22:19 IST )
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவருமான கேபி என்கிற குமரன் பத்மநாதன், பேங்காக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக் கொண்டுவர சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தாய்லாந்தில் நேற்று பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசை சிபிஐ அணுகியதாகவும், அவர் மீது கிடப்பில் உள்ள வழக்கு தொடர்பான விவரங்களை சமர்பித்து, பத்மநாதனை இந்தியா கொண்டுவர சிபிஐ முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் ரனோங் பகுதியில் கடந்த மாதம் விடுதலைப்புலிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பத்மநாதனும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மூன்று விடுதலைப்புலிகள் மற்றும் பத்மநாதன் ஆகியோர் தாய்லாந்தில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் பத்மநாதனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
சிபிஐ ராஜீவ் என்று உடனேயே ஆரம்பிச்சுடுவாங்களே..